பேசும் தெய்வம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்

பேசும் தெய்வம் அருள்மிகு அன்னை காமாட்சி அம்மன் திருக்கோயில், காரைக்குடி கழனிவாசலில் உள்ள காளையப்பன் நகரில் வீற்றிருக்கிறது. இக்கோயில் மூலவராக காமாட்சி அம்மன் மற்றும் உடன் பிரதி தெய்வங்களாக விநாயகர், முருகர், தொட்டிச்சி அம்மன், பதினெட்டாம்படி கருப்பர் அருள் பாளிக்கின்றன.


இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் உற்சவம் நடைபெறும். இதில் பக்தர்கள் பால்குடம், வேல், காவடி, அக்கினிச்சட்டி, பூ மிதித்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவர். இத்திருவிழாவின் கடைசிநாளில் முளைப்பாரி எடுத்தல் மற்றும் அம்மன் திருவீதி உலாவுடன் நிறைவு பெறும்.


பக்தர்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வையும் அருள்வாக்கின் மூலம் கூறுவதால், பேசும் தெய்வம் காமாட்சி அம்மன் திருக்கோயில் என்று பக்தகோடிகளால் அன்போடு அழைக்கப்படுகிறது. இக்கோயில் பர்மாவில் உள்ள ரங்கூனில் இருந்து பிடிமண் கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கான வழிகளுக்கு, Google வரைபடத்தைப் பயன்படுத்தவும்


தொடர்புக்கு கீழ்கண்ட எண்ணை அழைக்கவும் 

+91 4565 292283‬